கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்த்தின.
இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து,வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று ரூ.50 உயர்த்தின.
இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆறு வாரங்களுக்குள் இரண்டாவது விலை உயர்வு ஆகும்.ஏற்கனவே பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,2014 ஆம் ஆண்டில் 2 சிலிண்டர் வாங்கும் அளவுக்கு பணம் இருந்த நிலையில்,தற்போது அதே அளவு பணம் 1 சிலிண்டர் வாங்குவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று மத்திய அரசை கண்டித்து ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: 2014 இல் காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்த நிலையில்,மானியம் ரூ.827 வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது பாஜக ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.999 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், சிலிண்டருக்கு மானியம் தரப்படுவதில்லை. இதனால் காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை, தற்போது 1 சிலிண்டர் வாங்க மட்டுமே போதுமானதாக உள்ளது”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.