"ஒரே நாளில் இத்தனை இன்ப அதிர்ச்சிகளா" - முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஷாஜகான் புகழாரம்!

19 Aug 26

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19, 2026) 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்களை அறிவித்தார். இந்த அறிவிப்புகளைக் கேட்டு வியந்த அமைச்சர் ஷாஜகான், “ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி?” என முதலமைச்சர் விஜய்க்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் பேரவையில் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய 110 விதி அறிவிப்புகள் -ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு:

பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையிலும் ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,800 கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 16 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு 3 ரூபாய் கூடுதல் வருவாய் பெறுவார்கள்.

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக உயர்வு:

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்காக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து அதிரடியாக ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாகனம்:

சமீபத்திய கூட்டத்தொடரில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி விடுத்த கோரிக்கையை ஏற்று, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்கள் தொகுதி முழுவதும் தடையின்றி பயணம் செய்து களப்பணியாற்ற அரசு சார்பாகவே வாகனம் வழங்கப்படும் என  முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த வாகனத்திற்கான எரிபொருள் மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப் படியாகவும், ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்.

அமைச்சர் ஷாஜகானின் நெகிழ்ச்சியான பாராட்டு:

பொதுமக்களுக்கான சுகாதாரம், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் களப்பணி என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த விரிவான அறிவிப்புகளைப் பார்த்த அமைச்சர் ஷாஜகான் சட்டப்பேரவையில் முதலமைச்சருக்குப் புகழாரம் சூட்டினார்.

அவர் பேசுகையில், "இத்தனை இன்ப அதிர்ச்சி ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படி? மக்களுக்கு மருத்துவ காப்பீடு, ஆவின் பால் கொள்முதல் விலை ஏற்றம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் விஜய்க்கு, மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்