“சவுதியில் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்” -சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்!

20 Aug 26

சவுதி அரேபியாவில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது.

சம்பவத்தின் பின்னணி:

மயிலாடுதுறை மாவட்டம், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாவீரன் உள்ளிட்ட மீனவர்கள் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று அதிகாலை, கடல் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் மற்றொரு மீனவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டப்பேரவையில் அதிமுகவின் கவன ஈர்ப்புத் தீர்மானம்:

சட்டப்பேரவை தொடங்கியதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்துச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

தீர்மானம் கொடுக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததைக் கண்டித்து, முந்தைய நாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

உயிரிழந்த மீனவரின் உடலைத் தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அவையில் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் பதில் அளிக்கத் தயாராக இருப்பது அவசியம்:

அதற்குப் பிறகே முழுமையான விவாதம் நடத்தலாம் என்றும் சபாநாயகர் விளக்கமளித்தார்.

அமைச்சர் தரப்பு விளக்கம்:

அரசுத் தரப்பில் பதிலளித்த அமைச்சர் ஆதவ், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முறையான புலன் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இந்த விசாரணையின் காரணமாகவே உயிரிழந்த மீனவரின் உடலைத் தாயகம் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அவையில் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்