“மூச்சுத்திணறல் காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு” -முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் நலம் விசாரிப்பு!

10 Sep 26

சென்னை:

திடீர் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார் என அமைச்சர் மரியா வில்சன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை அறிக்கை மற்றும் உடல்நிலை விபரம்:

திடீர் உடல்நலக்குறைவு:

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வி.எஸ். பாபு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செயற்கை சுவாச உதவி:

தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையளித்து வருகின்றனர்.

உடல்நிலை சீராக உள்ளது:

 தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் நலம் விசாரிப்பு:

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்த தமிழக முதலமைச்சர் விஜய், உடனடியாக அவரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மரியா வில்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.கின்றனர்.

அரசியல் பின்னணி:

சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், வி.ஐ.பி தொகுதியான கொளத்தூரில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டவர் வி.எஸ். பாபு. யாரும் எதிர்பாராத வகையில் மிகக் கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் உடல்நலக்குறைவு தவெக தொண்டர்களிடையே சற்று கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என கட்சியினர் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வரு

முக்கிய செய்திகள்