"மிசா விவகாரம்" - மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவளிக்கத் திரையுலகப் பிரபலங்கள் தயக்கம்?

11 hours ago

 

சென்னை:

 முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்த சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கத் திரையுலகினர் தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரையுலகின் மௌனமும் பின்னணியும்:

வழக்கமாக, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) அரசியல் ரீதியாக ஏதேனும் நெருக்கடி அல்லது விமர்சனங்கள் எழும்போது, திரைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் ஆதரவுக்குரல் எழுப்புவது அரசியல் களத்தில் வாடிக்கையான ஒன்றாகும்.

தங்களுக்குச் சாதகமான இந்த ஆதரவைத் திரட்டுவதைத் திமுக தரப்பும் எப்போதுமே மிகக் கச்சிதமாகச் செய்து முடிக்கும்.

ஆனால், தற்போதைய மிசா சர்ச்சையில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவிக்கக் கோரிப் பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளைத் திமுகவினர் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

கைவிரித்த பிரபலங்கள்:

திமுக தரப்பிலிருந்து அழைப்புச் சென்ற பல திரைப்பலங்கள், பல்வேறு காரணங்களைச் சாக்காகக் கூறி இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

நேரடியாகத் தற்போதைய ஆளும் அரசுக்கு எதிரான அரசியல் விவாதங்களில் சிக்கிக்கொள்ள விரும்பாததே இவர்களது இந்தத் தயக்கத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

 

குறிப்பாக, கொங்கு மண்டலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல திரைத்துறையைச் சேர்ந்த சகோதரர்களின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்