“சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்” -வீட்டு வசதி வாரியம், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அனுமதி!

09 Sep 26

சென்னை:

சென்னையில் தற்போது இயங்கி வரும் பழைமையான தலைமைச் செயலகத்திற்கு மாற்றாக, அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதிகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டு, தமிழ்நாடு அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :

சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ள இந்தப் புதிய தலைமைச் செயலக வளாகத்தின் முக்கிய விவரங்கள்:

பரப்பளவு மற்றும் கட்டமைப்பு:

பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 23 முதல் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமையவுள்ளது. இதில் பிரதான கட்டடம் 15 தளங்களுடன், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அனுமதிகள்:

 திட்டத்திற்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான நிலங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான பகுதிகள் மற்றும் வருவாய்த்துறை நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

ஒரே கூரையின் கீழ் அனைத்துத் துறைகளும்:

அமைச்சகங்கள், அனைத்து அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள், நவீன சட்டப்பேரவை அரங்கம், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் உயர்தர பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமையும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடங்கவுள்ளன.

போக்குவரத்து மற்றும் அடுத்தகட்ட பணிகள் :

தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்திற்கு மாற்றப்படுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உயர்மட்டச் சாலை அமைப்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

அரசாணை வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும், அடுத்தகட்ட கட்டுமானக் கட்டமைப்பு நடவடிக்கைகளும் விரைவில் முழுவீச்சில்

முக்கிய செய்திகள்