ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி மோசமான தோல்வியை தழுவியது.
ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு குஜராத் அணியின் பவுலர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். தொட்டது எல்லாம் துலங்கும் என்பதை போல எந்தப் பந்தை வீசுனாலும் விக்கெட் மழையாகவே இருந்தது.
அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டுமே, அதிகபட்சமாக 30 ரன்களை குவித்தார். போல்ட் 15 ரன்களும், ஜெய்வால் 14 ரன்களும், படிக்கல் 12 ரன்களும் குவித்தனர். எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 17.5 ஓவர்களில் 118 ரன்களுக்கு சுருண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது 2வது குறைந்த பட்ச ஸ்கோராகும். முன்னதாக லக்னோ அணி ஆர்சிபிக்கு எதிராக 108 ரன்களை எடுத்தது குறைந்தபட்ச ஸ்கோராக இருக்கும்.
குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 3 விக்கெட்டுக்களும், நூர் அகமது 2 விக்கெட்டும், ஷமி, ஹர்திக் பாண்டியா, லிட்டில் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சஹா – கில் அதிரடியாக விளையாடினர். கில் 36 ரன்னில் ஆட்டமிழந்தாலும், சஹா (41 நாட் அவுட்) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (39 நாட் அவுட்) சிறப்பாக விளையாடி 13.5 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
இதன்மூலம், குஜராத் அணி 12 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில், 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள ராஜஸ்தான், மோசமான சாதனையை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் ( 9 விக்கெட்) மற்றும் அதிக பந்துகள் (37 பந்துகள்) வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.