டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் தடைபட்டால், கோப்பை யாருக்கு என்பது குறித்த புதிய விதிமுறைகளை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து பாகிஸ்தான் அணி 3வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்று நடக்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, 2வது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஒருவேளை இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் பட்சத்தில் இரு அணிகளும் 10 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருந்தால் மட்டுமே, வெற்றியாளர் அறிவிக்கப்படும். இல்லையெனில் ஆட்டம் ரத்து செய்யப்படும். குறிப்பாக, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
சூப்பர் 12 சுற்றின் பிரிவில் முதலிடம் பிடித்ததால் இந்திய அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி ஆட்டம் மழையால் தடைபட்டால், இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது ஐசிசியின் புதிய விதிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த புதிய விதிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
பொதுவாக, அரையிறுதி, இறுதிப் போட்டி உள்ளிட்ட முக்கிய ஆட்டங்களுக்கு ரிசர்வ் டே அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், அதனை மாற்றி கோப்பையை பிரித்து வழங்குவது சரியாக இருக்காது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.