புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரம் களப்பக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் சுபாஷினி(16).இவர் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி கடந்த இரண்டு மாதங்களாக முறையாக மாதவிடாய் சுழற்சி ஏற்படாமலும் வயிற்று வலியிலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த பள்ளி மாணவியின் தாயார் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக கூட்டிச் சென்றுள்ளார்.
பள்ளி மாணவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.
மேலும் படிக்க: இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி.. அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசாநாயக்க..!!
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவியின் தாயார் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மகளிர் காவல் துறையினர் பள்ளி மாணவி சுபாஷினியிடம் நடத்திய விசாரணையில் அறந்தாங்கி மணிவிளான் தெருவை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விக்னேஷ்(23) என்பவர் தங்கள் வீட்டிற்கு செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வரும் பொழுது தன்னை காதலிப்பதாகவும்,திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி தன்னை இவ்வாறு செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விக்னேஸ் மீது போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவி ஒருவர் இளைஞரால் ஏமாற்றப்பட்டு ஆண் குழந்தை பிறந்து இறந்த நிலையில் அவரை ஏமாற்றியவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் மற்றுமொரு பள்ளி மாணவி இளைஞரால் கர்ப்பமடைய செய்யப்பட்டுள்ள சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.