வேலூர் : குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 70) என்பவருக்கும் இவரது அண்ணன் மகன் மூபாரக் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே முபாரக்கின் மகன் முஷாரப் (வயது 19) குடியாத்ததில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்காக முஷாரப் இன்று சென்றுள்ளார்.
அப்பொழுது மசூதிக்கு வந்த அவரது சின்ன தாத்தா இஸ்மாயில் முன்விரோதம் காரணமாக முஷாரப்பின் தலையில் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த முஷாரப்பை உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…
This website uses cookies.