கல்லூரி மாணவனை கத்தியால் சரமாரியாக குத்திய 70 வயது முதியவர் : தொழுகைக்காக மசூதிக்கு சென்ற போது துணிகரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2022, 8:41 pm

வேலூர் : குடியாத்தம் அருகே சொத்து தகராறில் மாணவரை கத்தியால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 70) என்பவருக்கும் இவரது அண்ணன் மகன் மூபாரக் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே முபாரக்கின் மகன் முஷாரப் (வயது 19) குடியாத்ததில் உள்ள அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது கிராமத்தில் உள்ள மசூதியில் தொழுகைக்காக முஷாரப் இன்று சென்றுள்ளார்.

அப்பொழுது மசூதிக்கு வந்த அவரது சின்ன தாத்தா இஸ்மாயில் முன்விரோதம் காரணமாக முஷாரப்பின் தலையில் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த முஷாரப்பை உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து இஸ்மாயிலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!