கோவை துடியலூர் குப்பைத் தொண்டியில் கிடந்த ஆண் நபரின் இடது கை வழக்கில் துப்பு துலங்கியது.
கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மட்டும் கண்டறியபட்டது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. துடியலூர் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் கண்டறியப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு (வயது 39) என்பவரது என்று தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபு. அவரின் செல்போன் கடந்த 15″ஆம் தேதியில் இருந்து செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது
ஈரோடு போலீசாரும் இங்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது குப்பை தொட்டியில் கிடைத்தது கை பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.