மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லபாய் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த செல்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (50) த/பெ. சிதம்பரம் என்பவரை நான்கு நபர்கள் கொலை செய்தது சம்பந்தமாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வழக்கின் முதற் கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்துப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜனுக்கு ஆதரவாக இன்று கொலை செய்யப்பட்ட அவரது சகோதரர் பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியன் மேற்படி சொத்தினை சமமாகப் பிரித்து தருமாறு கேட்டு, மகாலிங்கத்திடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர்.
மேலும் படிக்க: ஒரே நாளில் 3 கொலை வழக்குகளில் ஆஜர்.. ராக்கெட் ராஜாவால் நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு!
திருமணமான பிரியா மற்றும் அழகுவிஜய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரியா, தனது தந்தை பாண்டியராஜன் வீட்டில் இருந்து கொண்டு அழகுவிஜய் மீது நீதிமன்றத்தில் பராமரிப்பு வழக்கும், விவாகரத்து வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜன், மகாலிங்கத்திடம் தனது மகளுக்கு சேர வேண்டிய சொத்தினைப் பிரித்து தருமாறு கேட்ட போது, ஏற்ப்பட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியராஜனின் புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாண்டியராஜனின் மகள் பிரியா, அவரது கணவர் அழகுவிஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பாண்டியராஜன் தனது சகோதரர் பாலமுருகனை வைத்து, ஏதாவது செய்ய வேண்டும் என்ற முடிவில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேற்படி பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் தன்னை தாக்குவதற்கு முன்பாக அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்த மகாலிங்கம் மற்றும் அவரது மகள் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் (1) பரத் (2) நாக இருள் வேல் (3) கோகுல கண்ணன் மற்றும் (4) பென்னி ஆகியோருடன் சேர்ந்து சரித்திரப்பதிவேடு குற்றவாளியான பாலமுருகன் (எ) பாலசுப்பிரமணியனை கொலை செய்துள்ளனர்.
பாலமுருகனை கொலை செய்த அனைத்து எதிரிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமண உறவினால் ஏற்பட்ட பிரச்சினையாலும், அவர்ளுக்கிடையே சொத்துப் பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையாலும் நடைபெற்றதாகும். வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.