ஒரே நாளில் 3 கொலை வழக்குகளில் ஆஜர்.. ராக்கெட் ராஜாவால் நெல்லை நீதிமன்றத்தில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2024, 11:08 am
பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரும் தென் தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடியாக அறியப்படுபவருமான ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து அவர் தனது வழக்கறிஞர்களுடன் மொத்தம் மூன்று வழக்குகளில் நீதிபதிகள் முன்பு ஆஜராகினார்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
மேலும் படிக்க: தெருநாய்கள் கடித்து குதறி கவ்வி இழுத்து சென்ற சம்பவம்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் மேலும் 2018 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதேபோல் தாழையூத்தில் 2018ஆம் ஆண்டு பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜராகினார்.
அந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அதை தொடர்ந்து ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.
பிரபல ரவுடியாக அறியப்படும் ராக்கெட் ராஜா ஒரே நாளில் இரண்டு கொலை வழக்குகள் உட்பட மூன்று வழக்குகளில் ஆஜரான சம்பவம் நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியது
0
0