சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லை முடக்கப்பட்டுள்ளதா என்று அதில் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது முடக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்கவும்’ என்று கூறி இன்ஸ்டாகிராம் டுவிட்டரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்பட தொடங்கியதாக கூறியுள்ளார். ‘வேகமாக சரிசெய்த இன்ஸ்டாகிராமிற்கு நன்றி. இப்போது என்னுடைய கணக்கு மீண்டும் செயல்படுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நடிகைகள் அம்ரிதா ஐயர், காயத்ரி ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
ஜேசன் சஞ்சய்யின் என்ட்ரி விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக சினிமாவை விட்டு விலகவுள்ள நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய்…
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
This website uses cookies.