கோவை : கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோவை மாநகராட்சி அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் சந்தித்து ஆசி பெற்றார்.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஷர்மிளா சந்திரசேகர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.சாலையோர வியபாரிகள், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவை கொடிசியா வளாகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமியை கோவை மாநகராட்சி 38 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் உடனிருந்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.