திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் பலூன் காஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலியான நிலையில் அருகில் புகைபிடித்தவரால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் போத்தீஸ், சென்னை சில்க்ஸ், உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. விடுமுறை என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டமும், மேலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் போத்தீஸ் துணிக்கடை எதிரில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அங்கிருந்த பொது மக்கள் அலறி அடித்துக் கொண்டு நாலு பக்கமும் சிதறி ஓடினர். அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
தகவல் அறிந்த கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரியின் பலூனுக்கு நிரப்பப்பட்ட ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்தது தெரியவந்தது.
இதில் சம்பவ இடத்தில் பலூன் வியாபாரி படுகாயம் அடைந்து பலியானார். காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், முதற் கட்ட விசாரணையில் பலியான நபர் கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம், கரட்டான் காடு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் ரவிக்குமார் என்ற மாட்டு ரவி (35) என காவல்துறையை சந்தேகிக்கின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது காவல்துறை தெரிவிக்கின்றனர்.
மேலும், கேஸ் பலூன் விற்ற நபர் தப்பி ஓடிவிட்டார். வரகனேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மன்சூர் என்பவர் ஆட்டோவை நிறுத்திவிட்டு வாடகை வாங்க சென்றுள்ளார். இதனால் ஆட்டோ மட்டும் சேதம் அடைந்தது.
கேஸ் சிலிண்டர் வெடித்த இடத்தில் நின்று இருந்த 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களுக்கு காயமடைந்தனர். உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய பலூன் விற்ற நபரை காவல்துறையினை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
This website uses cookies.