தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் கோடை மழையால் அறுவடைக்கு வரும் தருவாயில் செடியிலேயே அழுகும் மல்லிகை பூக்களால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லி, முல்லை, சாமந்தி, பட்டன் ரோஸ், அரளி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை அதிகமாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்கள் தருமபுரி சந்தையில் இருந்து பெங்களுரு, சென்னை, ஈரோடு, மற்றும் ஒசூர் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் மல்லிகைப்பூ விளைச்சல் குறைவாக இருந்ததால் விலை உயர்ந்து ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மல்லிகை பூ விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் விளைச்சல் மற்றும் வரத்து அதிகரிப்பால் மல்லிகைப்பூ விலை குறைந்து கிலோ 300 வரை விற்பனையாகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பெய்து வந்தது. தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை கனமழையாக பெய்து வந்தது. இதனால் தருமபுரி, செட்டிக்கரை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபடடி பகுதிகளில் மல்லிகைப்பூ அறுவடைக்கு தயாரான தருவாயில் செடியிலேயே அழுகி வருகிறது.
மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மல்லிகை பூ செடியில் ஒருவித நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து பாதுகாக்க மருந்து அடிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டததில் மல்லிகை பூ விலை அதிகரித்த போது, விளைச்சல் இல்லை. தற்பொழுது விளைச்சல் அதிகமாக இருக்கும் நேரத்தில் மழையால் பூக்கள் அழுகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.