திண்டுக்கல் அருகே 2 சகோதரிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிரசன்னகுமாரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்
திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப் போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.
2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக் கொண்டு, நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் படிக்க: மக்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து ராசாக்கா…. நா.த.க. வேட்பாளருக்கு பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்..!!
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் ஆலோ சனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
வத்தலகுண்டு நான்கு வழிச்சாலை பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்னகுமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளது.
இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வருகின்றேன். சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டினேன். பின்னர், நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் இச்சம்பவத்தில் ஈடுபட்டேன்.
கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கினேன், என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, போலீஸார் அவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.