திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (வயது 60.) இவர் தற்பொழுது திண்டுக்கல் அடுத்துள்ள வேடப்பட்டியில் வசித்து வருகிறார். இவர் திமுக பிரமுகராவார். இவரது மனைவி நிர்மலா. இவர் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்தார்.
மேலும் படிக்க: இது நமக்கு கெட்ட நேரம் ; வாதத்திற்கு மருந்துண்டு… பிடிவாதத்திற்கு மருந்தில்லை… அமைச்சரின் பேச்சால் பரபரப்பு!!!
இந்நிலையில் உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்துகிறார். மூத்த மகளுக்கு திருமணமான நிலையில் 2 குழந்தைகளும் வெளியூரில் படிக்கின்றனர்.
இந்நிலையில் மாயாண்டி ஜோசப், மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மாயாண்டி ஜோசப், யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து டூவீலரில் வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் கிளம்பி சென்றார். அப்போது, இவர் வருகைக்காக முன்னரே காத்திருந்த மர்ம கும்பல் எதிர் திசையில் டூவீலரில் வந்து மாயாண்டி ஜோசப், மீது மோதினர். நிலை தடுமாறி கீழே விழுந்த மாயாண்டி ஜோசப்பை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பியது.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் தாலுகா போலீசார் மாயாண்டி ஜோசபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயாண்டி ஜோசப் மீது கொலை உட்பட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது வேறு காரணத்திற்காக கொலை நடைபெற்றதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.