ஆளுக்கு 15 லட்சம் போடுவேன் என பிரதமர் மோடி கூறினார் அல்லவா..? அதை தற்போது கணக்கிட்டு கொடுத்தால், முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையின் நிலுவைத் தொகையான 29 ஆயிரத்தை வழங்குவார் என திமுக அமைப்பு செயலர் ஆர்எஸ் பாரதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் திட்டத்தை கெஜ்ரிவால் அவர்கள் தனி குழு கொண்டு அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என ஆராய அறிவுறுத்தி இருக்கிறோம்.
இந்தியாவிற்கே முன்னோடி தலைவராக ஸ்டாலின் விளங்குகிறார். குடும்பத் தலைவி உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளது. அண்ணாமலை அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் வழங்கும்போது, 29 ஆயிரம் ஆக மொத்தம் சேர்த்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் மோடி நபர் ஒருவருக்கு 15 லட்சம் தருவதாக கூறினாரே, அதை கணக்கிட்டு வழங்கினார்கள் என்றால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் 29 ஆயிரத்தை வழங்குவார். அதற்கு நீங்கள் தயாரா..?, என அவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.