குமரி மாவட்டத்தில் புதிய நகராட்சியான கொல்லங்கோடு நகராட்சியில் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுக நகர்மன்றத் தலைவராக திமுக பெண் பிரமுகர் பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தின் கடைக்கோடி நகராட்சியும் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய நகராட்சியுமான கொல்லங்கோடு நகராட்சியில் நடைபெற்று முடிந்த நகர்மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராணி ஸ்டீபன் திமுக, காங்கிரஸ் பாஜக உறுப்பிர்களின் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுக தலைமை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொல்லங்கோடு நகராட்சியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிபெற்ற திமுகவினர் பதவி விலக வேண்டுமென திமுக தலைமை அறிவித்திருந்தது. மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலகவேண்டும் என பேசி இருந்தார்.
இந்நிலையில் கொல்லங்கோடு நகராட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கட்சியை சேர்ந்த ராணி ஸ்டீபன், திமுக தலைமையின் முடிவை ஏற்காமல் இருந்துள்ளார். அதைதொடர்ந்து, இன்று கொல்லங்கோடு நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நகராட்சியின் நகர்மன்ற தலைவராக ராணி ஸ்டீபன் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் திமுக, காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.
திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுக கட்சியை சேர்ந்தவர் நகர்மன்ற தலைவராக பதவியேற்றது கட்சியனரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதேபோல் மாவட்டத்தில் திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளிலும் தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.