கோவை : கோவையில் திமுக வேட்பாளர் தர்மத்திற்கு செலவு செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை குனியமுத்தூர் கிளையில் உறுப்பினராக உள்ளவர் பா.விஜயகுமார் மற்றும் அவரது மனைவி வி.நிரஞ்சனாதேவி. 97 வது வார்டில் தேர்தல் பணி செய்து வந்த இவருக்கு பதிலாக திமுக நிர்வாகியான மருதமலை சேனாதிபதியின் மகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த வார்டில் நிரஞ்சனா தேவி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த சூழலில் நிரஞ்சனா தேவி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நிவேதிதா வரம்பு மீறி செலவு செய்வதாகவும், பொதுமக்களுக்கு பண விநியோகம் செய்வதாகவும் புகார் அளித்தார்.
இந்த நிலையில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குனியமுத்தூரை சேர்ந்த கட்சி உறுப்பினர் தோழர் வி.நிரஞ்சனாதேவி வார்டு எண் 97ல் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி போட்டியிடுகிறார்.
அவருக்கு துணையாக அவரது கணவர் பா. விஜயகுமார் செயல்பட்டு வருகிறார். கட்சியின் கட்சி கட்டுப்பாடுகளை மீறியுள்ள விஜியகுமார் மற்றும் நிரஞ்சனாதேவி ஆகிய இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இனி மேற்கொண்டு எவ்வித சம்மந்தமும் இல்லை. கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.