கன்னியாகுமரி : தென்தாமரைகுளம் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து பாஜகவில் இணைந்தார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 4 வார்டுகளில் பாஜகவும், 3 வார்டுகளில் அதிமுகவும் ,3 வார்டுகளில் திமுகவினரும் ,4 வார்டுகளில் சுயேட்சை கவுன்சிலர்களும் , 1 வார்டில் காங்கிரஸ் கவுன்சிலரும் வெற்றி பெற்றனர்.
இதனையடுத்து பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க வும்-திமுக வும் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற மல்லிகா என்ற பெண் கவுன்சிலர் தலைமறைவானார் .
காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தலைமறைவானதால் தலைவர் பதவியை கைப்பற்றுவதில் திமுக விற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ் கவுன்சிலர் வருகையை எதிர்பார்த்து பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு திமுகவினர் நேற்று திரண்டிருந்தனர் .
அப்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தளவாய்சுந்தரம் ,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் புடைசூழ 4 பாஜக கவுன்சிலரும் , 3 அதிமுக கவுன்சிலரும் அவர்களுடன் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மல்லிகாவும் வந்தார்.
இதனால் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பாஜக- திமுக நிர்வாகிகளுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இவ்வாறு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக-பா.ஜ.க இடையே மல்லுக்கட்டு நடந்து வந்த நிலையில் நேற்று காங்கிரஸ் பெண் கவுன்சிலரான மல்லிகா ,முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை நாகர்கோவிலில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் .
பின்னர் அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டையினை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழங்கினார். பெண் கவுன்சிலர் மல்லிகா பா.ஜ.க வில் இணைந்ததால் தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவர் பதவியை பா.ஜ.க கைப்பற்றுவதில் ஏற்பட்டு வந்த சிக்கலுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.