தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), இரண்டு மகன்களும் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்து விட்டு மாலை வீட்டிற்கு வந்த போது விபத்தில் இருசக்கர வாகன மோதி படுகாயம் அடைந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவருக்கு மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் செந்தில்குமார் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து தெரிவித்தனர்.
இதனால் அவரது மனைவி தனது கணவரின் உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவ குழுவினர் நேற்று இரவு 9 மணி முதல் இன்று விடியற்காலை இரண்டு மணி வரை விடிய, விடிய செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கண் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும் போது என் கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் இரண்டு பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை ஒன்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.