மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் : மனதை ரணமாக்கும் சம்பவத்தில் திடீர் திருப்பம்!!
சிவகாசி அருகே அரசு உதவி பெறும் சி.எஸ்.சி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் பயிலும் மன நலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அவல நிலை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரனிடம் கேட்டபோது பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பவர் தமக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியின் பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில் ஆசிரியர் இமானுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி நிர்வாகம் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒழுங்கீன செயலில் ஆசிரியர் ஈடுபட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.