வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை சத்துவாச்சாரி நீதிமன்றம் விடுதலை வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு தொடர்பாக வேலூர் சத்துவாச்சரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அருண்குமார் மீண்டும் முருகனை 24.05.2022 ஆம் தேதி இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இன்று முருகன் ஆஜரானர்.
இந்த நிலையில் அரசு தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து முருகன் இன்று விடுவிக்கப்படுவதாக ஜே.எம். 1 நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் வருங்காலம் மாற்றம் ஏற்பட வேண்டும். 2026 தமிழக மக்கள் முழுமையாக பலன் பெற வேண்டும் இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா சாலை பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் தமிழக ஒருங்கிணைந்த முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீரமங்கை…
பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக உள்ளார். இவர் அண்மையில் நடித்த ரெட்ரோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக…
கோவை வெள்ளலூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள காவல்துறை அவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்குமாறு…
காமெடி நடிகரான சந்தானம் தற்போது நடித்தால் ஹீரோதான் என்ற பாணயில் அண்மைக்காலமாக நடித்து வருகிறார். படம் ஒடுதோ இல்லையோ, வருடத்திற்கு…
ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் நம்ரதா சிகுருபதி. ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் இயக்குனராக பணியாற்றிய நம்ரதா…
This website uses cookies.