பேரறிவாளனை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனுக்கு விடுதலை? வேலூர் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 10:16 pm

வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை சத்துவாச்சாரி நீதிமன்றம் விடுதலை வழங்கியது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு தொடர்பாக வேலூர் சத்துவாச்சரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அருண்குமார் மீண்டும் முருகனை 24.05.2022 ஆம் தேதி இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இன்று முருகன் ஆஜரானர்.

இந்த நிலையில் அரசு தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து முருகன் இன்று விடுவிக்கப்படுவதாக ஜே.எம். 1 நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?