Categories: தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை…

கோவை : நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட 2 வது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியிலிருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

28 ஆம் தேதி துவங்கிய காலை 10 மணியளவில் வேட்புமனு தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மாநகராட்சியில் 5 மண்டங்களிலும் மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையை பொறுத்தவரை கோவை மாநகர பகுதியில் உள்ள 100வார்டுகளுக்கு 5 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதே போல கோவை புறநகர் பகுதியில் உள்ள 7 நகராட்சிகள்,33 பேரூராட்சிகள், அந்த அந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்காக வேட்புமனு பெருவதற்காகவும், தாக்கல் செய்வதற்காகவும் அலுவலர்கள் காத்திருந்த நிலையிலும், 2 வது நாளிலும் மாநகராட்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நகராட்சிகளிலும் இல்லாத நிலையில், பேரூராட்சிகளில் 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள், மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளில் 198 கவுன்சிலர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 533 கவுன்சிலர்கள் என மொத்தம் 831 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

KavinKumar

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.