சென்னை: நகை வாங்குவது போல நடித்து தங்க நகையை திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் தங்க நகை கடை உள்ளது. இந்த நகைக் கடையில் பாஸ்கர் என்பவர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடைக்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் கடையில் வேலை செய்யும் கௌசல்யா என்பவரிடம் தங்க காப்பு காண்பிக்க கூறியுள்ளனர்.
அப்போது அவர் ஒவ்வொரு மாடலாக எடுத்து காண்பித்துள்ளார். நிறைய மாடல்களை பார்த்த அப்பெண்கள் அதன் பின்பு எந்த மாடலும் பிடிக்கவில்லை என்று கிளம்பி சென்று விட்டனர். அதன் பிறகு இரவு நகைகளை சரிபார்த்த போது 20 கிராம் எடை கொண்ட தங்க காப்பு காணாமல் போயிருப்பதைக் கண்டு கௌசல்யா அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் தனது மேனேஜர் பாஸ்கரிடம் தெரிவித்தார். பாஸ்கர் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது இரண்டு பெண்கள் நகை வாங்குவது போல வந்து தங்க காப்பை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து பாஸ்கர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த திரு.வி.க நகர் போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து இரண்டு பெண்களையும் தேடி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.