விவசாய நிலங்களில் இயங்கும் கல் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க கோரி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு!
விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், நாங்கள் பொள்ளாச்சி மற்றும் நனைமலை பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் நடத்திவருகிறோம்.
மேலும் முறையாக கனிமம் மற்றும் சுரங்கத்துறை மற்றும் வணிகவரித்துறை GST பெற்று தொழில் செய்து வருகிறோம். மேலும் ஆனைமலை சார்ந்த பகுதிகளில் நில உரிமையாளர்கள் துணையுடன், கேரளா பகுதிகளைச் சார்ந்த சில சமூக விரோதிகள் ஆனைமலை, ஒடையகுளம். செம்மணாம்பதி, கோவிந்தாபுரம் மற்றும் சில பகுதிகளில் சட்ட விரோதமாக விவசாய நிலங்களில் உள்ள பாறைகளை வெடி வைத்து உடைத்து கேரளா மாநில பகுதிகளுக்கு டிப்பர் லாரிகள் மூலமாக விற்பனை செய்துவருகின்றனர்.
இதனால் அரசுக்கு பெரும் வருமான இழப்பீடு ஏற்படுவதோடு முறையாக அனுமதி பெற்று தொழில் செய்துவரும் நாங்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளோம்.
எனவே தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்துநிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.