விவசாய நிலங்களில் இயங்கும் கல் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க கோரி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 5:27 pm
Quarry
Quick Share

விவசாய நிலங்களில் இயங்கும் கல் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க கோரி கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு!

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், நாங்கள்‌ பொள்ளாச்சி மற்றும்‌ நனைமலை பகுதிகளில்‌ அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகள்‌ மற்றும்‌ கிரஷர்கள்‌ நடத்திவருகிறோம்‌.

மேலும்‌ முறையாக கனிமம்‌ மற்றும்‌ சுரங்கத்துறை மற்றும்‌ வணிகவரித்துறை GST பெற்று தொழில்‌ செய்து வருகிறோம்‌. மேலும்‌ ஆனைமலை சார்ந்த பகுதிகளில்‌ நில உரிமையாளர்கள்‌ துணையுடன், கேரளா பகுதிகளைச்‌ சார்ந்த சில சமூக விரோதிகள்‌ ஆனைமலை, ஒடையகுளம்‌. செம்மணாம்பதி, கோவிந்தாபுரம்‌ மற்றும்‌ சில பகுதிகளில்‌ சட்ட விரோதமாக விவசாய நிலங்களில்‌ உள்ள பாறைகளை வெடி வைத்து உடைத்து கேரளா மாநில பகுதிகளுக்கு டிப்பர்‌ லாரிகள்‌ மூலமாக விற்பனை செய்துவருகின்றனர்‌.

இதனால்‌ அரசுக்கு பெரும்‌ வருமான இழப்பீடு ஏற்படுவதோடு முறையாக அனுமதி பெற்று தொழில்‌ செய்துவரும்‌ நாங்கள்‌ பெரும்‌ பாதிப்படைந்து உள்ளோம்‌.

எனவே தாங்கள்‌ தக்க நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களில்‌ சட்ட விரோதமாக செயல்படும்‌ கல்குவாரிகளை தடுத்துநிறுத்துமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 232

0

0