தஞ்சை : தஞ்சையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பல கோடி மதிப்புள்ள 14 சிலைகள் மீட்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடியாக மீட்டனர்.
தஞ்சையை சேர்ந்தவர் கணபதி. இவர் தஞ்சையில் ஆர்ட் வில்லேஜ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் பழங்கால சிலைகளை முறையான ஆவணம் இன்றி வைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி தலைமை டி.ஜி.பி டாக்டர் ஜெயந்த் முரளி, போலீஸ் சூப்பிரண்டு ரவி, மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அதிரடி திட்டத்தை வகுத்தனர். அதன்படி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மலைச்சாமி, டி.எஸ்பி. கதிரவன் தலைமையில் , இன்ஸ்பெக்டர் இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் 12 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. உடனடியாக தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, முறையான ஆவணங்கள் ஏதுமின்றி பழங்கால சிலைகளை கணபதி வைத்திருந்தது தெரியவந்தது. பெருமாள், ரிஷபதேவர், சிவகாமி அம்மன், மகாவீரர் உள்ளிட்ட 14 சிலைகள் எந்தவித ஆவணமின்றி அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, 14 சிலைகளையும் போலீசார் மீட்டு கணபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.