மாமியாரை அடிக்கடி ரகசியமாக சந்தித்த அண்ணன்.. பொங்கிய தம்பி : பட்டப்பகலில் நடந்த வெறிச்செயல்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே அமர்ந்து சிவக்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது.
அப்போது சிவக்குமார் வெளியே வர முற்பட்ட போது அவரை அருகில் உள்ள விவசாய நிலத்தில் ஓட ஓட விரட்டி முகத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இதனிடையே தேவேந்திரன் (30) என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்து தமது அண்ணன் சிவக்குமாரை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க: வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜக பிரமுகரின் மகன்.. ஷாக் வீடியோ : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!
தமது மாமியார் ஜானகியுடன் சிவகுமார் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், இதனை கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
This website uses cookies.