வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜக பிரமுகரின் மகன்.. ஷாக் வீடியோ : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 4:37 pm

வாக்குச்சாவடியை கைப்பற்றிய பாஜக பிரமுகரின் மகன்.. ஷாக் வீடியோ : நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?!

குஜராத் மாநிலத்தில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

குஜராத்தில் உள்ள தாஹோத் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யாக ஜஸ்வந்த்சிங் பாபோர் உள்ளார். இந்நிலையில், தாஹோத் மக்களவைத் தொகுதியில் உள்ள பார்த்தம்பூர் கிராமத்தின் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அத்தொகுதியின் பாஜக எம்.பியின் மகன் விஜய் பாபோர் கைப்பற்றினார்.

அது சம்பந்தமான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர் நேரடியாக ஒளிபரப்பினார். பின்பு விஜய் பாபோர் அந்த வீடியோவை நீக்கினார். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது, தஹோத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபாபென் தாவியாட் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தாஹோத் தொகுதியில் 58.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!