கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதி பூங்கா நகர் ஆஞ்சநேயர் கோவில் வீதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22). உமேரா தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
ஷாஜகான் ஆட்டோ ஓட்டுனர். மேலும் ஷாஜகானுக்கு அதிக குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வீட்டில் தூங்கிகொண்டு இருந்த முகமது ரபிக் தனது மகன் ஷாஜகானிடம், ஏன் இப்படி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய், என்று கேட்டதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முகமது ரபிக், வீட்டில் இருந்த கத்தியை கொண்டு தனது மகன் ஷாஜகானின் வயிற்றுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியில் இரு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து முகமது ரபிக் மற்றும் அவரது மனைவி உமேரா ஆகியோர் நேரடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்து சரணடைந்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாஜகானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து முகமது ரபிக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.