சிலை வாங்கும் இடைத்தரகர்கள் போல பேசி திருடப்பட்ட ஐந்து சிலைகளை மீட்டு இரண்டு பேரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது ரங்கநாயகி அம்மன் கோயில். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் நிர்வாகிகள் சண்முகசுந்தரம், பாண்டியன் மற்றும் கோயில் பூசாரி ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி, மூவரையும் ஒரு அறையில் அடைத்த மூன்று பேர் கொண்ட கும்பல் இக்கோயிலுக்குச் சொந்தமான 5 சிலைகளையும் திருடிச் சென்றனர். இது குறித்து கோயில் தரப்பில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், திண்டுக்கல்லில் சிலர் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னையைச் சேர்ந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராஜேஷ் சிலைகளை வாங்கும் தரகர் போன்று இந்த கும்பலிடம் நீண்ட நாட்களாக பேசிப் பழகி உள்ளார். இதனையடுத்து, இவர்களை நம்பிய சிலை விற்பனையாளர்கள், சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரை அழைத்துச் சென்றனர்.
அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலையைக் காட்டிய ஈஸ்வரன் மற்றும் சேகரன் ஆகியோரை கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். மேலும், உடன் இருந்த இருவரையும் பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகரர், பார்வதி ஆகிய 5 சிலைகளை மீட்டனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிலையைக் கடத்தியவர்கள் சிலைகளை விற்பதற்காக கொடுத்துச் சென்றதும், அவற்றை இவர்கள் விற்கும்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டதும் தெரியவந்தது.
இச்சிலைகள் தொன்மையானவை இல்லை என்றாலும் விலை உயர்ந்தவையாக கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ. 12 கோடி வரை இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இக்கும்பலுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? இவர்களது செயல்பாடு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.