திருவள்ளூர் : சோழவரம் அருகே சொத்துக்காக தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற அக்கா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள மாபூஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (41) திருமணமாகாதவர். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக தொழில் செய்து வந்த பூபாலன், கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் அவரது தாயார் நீலம்மாலுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவரது அக்காவான தனலட்சுமிக்கும், இவருக்கும் அவ்வப்போது சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவரது வீட்டின் அருகே சுமார் 4 சென்ட் இடத்திற்காக அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடந்து வந்துள்ளது. பூபாலன் தனது அக்கா கணவர் ரவியை அரிவாளால் வெட்டியதற்காக சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ளார்.
இதன் காரணமாக, முன் விரோதம் இருந்து வந்த நிலையில் தலையில் காயங்களுடன் பூபாலன் இறந்து கிடந்தது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பூபாலன் அக்கா தனலட்சுமி குடும்பத்தினர் பூபாலனை சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த பூபாலனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல், வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டியதும், இதனால் பூபாலன் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து பூபாலனை அடித்து கொன்ற அக்கா தனலட்சுமி, அவரது கணவர் ரவி, மகன் வல்லரசு, மகள்கள் வெண்மதி, மஞ்சு உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துப் பிரச்சினை மற்றும் முன்விரோதம் காரணமாக சொந்த தம்பியை, அக்கா, தனது கணவர், மகன், மகள்கள் ஆகியோருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.