திருப்பூர் ; பல்லடம் அருகே எலக்ட்ரானிக் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கல்யாண். இவர் அவினாசிபாளையத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் மொபைல், லேப்டாப், கார் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்ற அவர் நேற்று காலை வழக்கம் போல கடைய திறக்க வந்துள்ளார். அப்போது கடையிம் ஷட்டரின் இரண்டு பக்க பூட்டுக்களும் உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது கடையிம் எந்த பொருட்களும் திருடு போகவில்லை.
அதனை தொடர்ந்து, கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்த போது முகத்தை துணியால் மூடிய படி இரண்டு வாலிபர்கள் கடையின் ஷட்டரின் பூட்டை உடைப்பது தெரியவந்தது. ஷட்டரின் நடுவில் இருக்கும் பூட்டை அவர்கள் உடைக்க முயற்சிப்பதும், அதனை உடைக்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்றதும் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதனை தொடர்ந்து கல்யாண் அளித்த புகாரின் அடிப்படையில் அவினாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்யாணின் கடைக்கு வந்த வடமாநில வாலிபர்கள் இருவர் ஒரு செல்போனை சர்வீஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
போனை வாங்கி கொண்ட கல்யாண் அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு நகலையும் பெற்றுள்ளார். அதனை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ஒரிசாவை சேர்ந்த ஹரிநாயக் (22), பிர்ந்தா நாயக் (20) என்பதும் இருவரும் சகோதரர் என்பதும் தெரியவந்தது. மேலும், கொடுவாய் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. கொடுவாய் மற்றும் அவினாசிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கும் அதில் தொடர்புள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.