திருச்சி ; 19 வயது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட நிலையில், காவல்நிலையத்தில் அவரது தாயார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா மேலூர் பகுதியில் வசிப்பவர் சுந்தர்ராஜ் – சுமதி. இவர்களது மகள் ஸ்ரீபவானி. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த கார்த்தி என்பவருடன் ஸ்ரீபவனிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில்
காதலாக மாறி உள்ளது.
இருவரும் ஊரைவிட்டு மாயமான நிலையில் பெண்ணை பெற்றோர் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், பெண்ணை மீட்டு தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், நண்பர்கள் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி இருவரும் சமயபுரத்தில் திருமணம் செய்து கொண்டு, துறையூர் வடக்கு தெரு பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கி உள்ளனர்.
இந்த நிலையில், இதை அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் துறையூர் காவல் நிலையத்தில் இருவரையும் ஒப்படைத்துள்ளனர் காதல் கணவன் கார்த்திக்கு 19 வயது என்றும், திருமண வயது முழுமையாக நிறைவு பெற வில்லை என்றும் கூறி உள்ளனர்.
இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக பெண்ணின் பெற்றோர் கூறுகின்றனர்.
இதனிடையே, திடீரென கார்த்தி பெண்ணின் தாய் சுமதியின் கைப்பகுதியில் பலமாக தாக்கினார். அதனால், பெண்ணின் தாயார் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனை அடுத்து, காவல் நிலையம் வாசலில் சுமதி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, 108 அவசர ஊர்தி மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீபவானியின் தாய் சுமதி அனுப்பி வைக்கப்பட்டார்.
கல்லூரிக்கு செல்லும் பெண்கள் காதல் வலையில் வீழ்வதால் பெற்றோர் படும் துன்பம் மாணவிகளுக்கு தெரியாமல் போகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.