அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினர், தடுத்து நிறுத்திய விசிகவினரால் வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.கவினரை அப்பகுதி விசிகவினர் தடுத்து நிறுத்தி சிலையை பூட்டிவிட்டு பா.ஜ.கவினரை திருப்பி அனுப்ப முயன்றுள்ளனர்.
இதனால் இரு கட்சியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.
காந்தி நகர் பகுதியை சேர்ந்த இருவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளதால் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளனர். இது பொது சிலை அல்ல நாங்கள் வைத்த சிலை என விசிக தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அம்பேத்கரின் வரலாறு பற்றி தெரியாமல் உள்ளனர் என பாஜகவினர் விசிகவினர் மாற்றி மாற்றி குறை சொல்லி விமர்சித்து வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மலை அணிவிப்பதில் பாஜக – விசிகவினர் இடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.