வேலூர் அருகே தரமற்ற முறையில் தார் சாலை அமைத்தது தொடர்பாக முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ளது அன்னை கஸ்தூரிபாய் தெரு. இத்தெருவில் கடந்த 1-ந் தேதி புதியதாக தார்சாலை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைக்கப்பட்ட தார் சாலையானது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாகவும், தாருடன் ஜல்லிகற்கள் ஒட்டாமல் நடக்கும்போதே ஜல்லிகற்கள் சாலையில் இருந்து பெயர்ந்து வரும் நிலையில் இருந்துள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் இருந்து வெறும் கைகளால் ஜல்லிக்கற்களை அள்ளி கீழே கொட்டி, அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், தரமற்ற தார் சாலை குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதைத் தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், சாலை அமைக்கப்பட்ட போது மழை பெய்ததால் சில அடி தூரம் சாலையில் தாருடன் ஜல்லிக்கற்கள் ஒட்டாத நிலை இருந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க உத்தரவிடப்பட்டது, என்றார்.
சாலை அமைக்கப்பட்ட போது அதை முறையாக கவனிக்காத மாநகராட்சி உதவி பொறியாளர் ஆறுமுகம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு, அதன்படி, அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் நேற்று (05.12.2022) புதிய சாலையும் அமைக்கப்பட்டது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.