சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறையில் பலத்த பாதுகாப்பையும் மீறி கைதிகள் செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வபோது சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு செல்போன்கள் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: 13 வயது மாணவனை கடத்தி உல்லாசம்… கர்ப்பமான ஆசிரியை : கோர்ட் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த முகமது சுகில் என்பவர் 80 கிராம் கஞ்சாவை பிஸ்கட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து திருட்டு வழக்கில் விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் உள்ள வேலூரைச் சேர்ந்த கவியரசு என்ற நபரை சந்திக்க வந்த போது அங்கிருந்த சிறை காவலர்கள் அந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது பிஸ்கட்டுகள் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து முகமது சுகில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதையடுத்து சிறை கண்காணிப்பாளர் வினோத் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் முகமது சுகில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி…
கார் ரேஸில் பிசி கோலிவுட்டின் டாப் கதாநாயகனாக வலம் வரும் அஜித்குமார், சமீப மாதங்களாகவே கார் பந்தயங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன்…
தன்னை திருமணம் செய்த திமுக நிர்வாகி, திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சி செய்வதாக கல்லூரி மாணவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.…
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசூராபாத் ரங்காபூர் பகுதியைச் சேர்ந்த மதுகர் ரெட்டி சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு…
உதித் நாராயணன் சார் நீங்களா? நேற்று முன்தினம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில்,…
This website uses cookies.