அபுதாபியில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதற்கட்டமாக துபாய் சென்ற அவர், அங்குள்ள உலக கண்காட்சியில் தமிழக அரங்கினை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, துபாய் அமைச்சர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழலை எடுத்துக் கூறி, தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து பேசி அவர்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.2,600 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
துபாய் பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அபுதாபிக்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, தமிழகம் – அபுதாபி இடையே உள்ள வர்த்தகம் குறித்தும், அந்நாட்டில் உள்ள தமிழர்கள் நலன் குறித்தும் பேசியதாக தெரிகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.