தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை ஆரம்பித்து விட்டனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நேற்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவையில் ஆறு இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம்,பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம் அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம், ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.