கோவையில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சந்தேகப்படும் 21க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர், குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும், கோவை மாநகராட்சி 82வது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் நடைபெற்றது.
இதேபோல், சென்னையில் 3 இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டிலும், நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.