திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது. அதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாகக் கூறி, திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ம் தேதி அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், அவர் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கணக்கில் வராத ரூ.1.20 கோடி பணம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவரது வீட்டில் ரகசிய அறை இருப்பதாகவும் தகவல் எல்லாம் பரவியது. பணத்தை எண்ணுவதற்காக பணம் எண்ணும் இயந்திரத்தை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்று எண்ணினர். மேலும், சோதனை நடக்கும் இடத்தில் லாக்கரை திறப்பதற்காக சாவியுடன் ஜெகத்ரட்சகன் ஊழியர்களை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.