எதிர்வர இருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா..? என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்துக்களின் உரிமை மீட்பு என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணத்தை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 28ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரப் பயணம் வரும் 31ம் தேதி சென்னையில் முடிவு பெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சாமி தரிசனம் செய்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி நடக்கிறது. சர்ச் சொத்து கிறிஸ்தவர்களுக்கும், மசூதி சொத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமாகிறது. ஆனால், இந்து கோவில்கள் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் நிறைய கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் பணிகள் பாதியில் நிற்கிறது. கோவில் வருவாயை செலவு செய்தாலே, கும்பாபிஷேகம் பணிகளை செய்து முடிக்கலாம். ஆனால், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் நாங்கள் மதசார்பற்ற அரசு நடத்துவதாக கூறும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, உண்மையில் மதசார்பின்மை அரசு நடத்துவதாக இருந்தால், வரும் விநாயகர் சதுர்த்திக்கு இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் ஆகம விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் மக்களே கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தாலும், அதற்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் அந்த துறையில் ஊழல் தான் அதிகரித்து வருகிறது, என வேதனை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காங்கிபாடு திரையரங்கில் ரோட்டில் ஒரு தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன் சாலையை கடந்து…
ரவி மோகனின் புதிய காதலி? ரவி மோகனும் அவரது மனைவியாக இருந்த ஆர்த்தியும் கடந்த 2024 ஆம் ஆண்டு தங்களது…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் பாபு. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும், ஃபேஸ்புக்…
தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் இயக்கதத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என்மீது என்னடி கோபம்…
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம்…
This website uses cookies.