கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து திமுகவினர், அவர்களையும் தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்கள் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கரூரில் சோதனையிட சென்ற அதிகாரிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக வருமானவரி துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறிய அதிகாரிகள், கொங்குமெஸ் சுப்ரமணி என்பவர் செல்வராஜ் என்பவருடன் பேசிய ஆடியோ பதிவு கிடைத்துள்ளதாகவும், கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கிவிட்டு, ரொக்கம், ஆவணங்களை பறித்து செல்லுமாறு அதில் பேசியதாக கூறுகின்றனர். மேலும், இந்த ஆடியோ ஆதாரத்தை காவல்துறையில் சமர்ப்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.