திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்தில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, 3வது தளத்திலிருந்து தரை தளத்திற்கு லிப்டின் மூலம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, மின்தடை ஏற்பட்டு திடீரென்று லிப்டின் இயக்கம் தடைபட்டது.
இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கி கொண்டார். பின்னர், அமைச்சர் உள்பட அவருடன் இருந்தவர்கள் ஆபத்து கால கதவின் வழியே மீட்கப்பட்டனர். இதையடுத்து,சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டுகளை சரியாக பராமரிக்காத என்ஜினீயர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரோப்காரில் சிறிது விநாடி அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சென்ற அவர், அடிவாரத்தில் இருந்து மலைக்கு ரோப் காரின் மூலம் சென்றார். பாதி வழிக்கு ரோப் கார் சென்ற போது, திடீரென மின்தடை ஏற்பட்டதால், அவரது ரோப் கார் அந்தரத்தில் சிறிது வினாடி ரோப் கார் நின்றது. பின்னர், சிறிறு நேரத்தில் மின்சாரம் வந்த பிறகு மீண்டும் ரோப் கார் இயக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கும், மின்தடைக்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்து அமைச்சர்கள் மின்தடையினால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் பேசு பொருளாகி விட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.